Matriculation fight will be a yearly issue if BN were to rule the country for many more years.
Please buy Thinakkural tomorrow (11-7-2013 ) for full news. Will appear in 1st page.
மெட்ரிகுலேசன் 2014 விண்ணப்பம் பூமிபுத்ரா மாணவர்களுக்கு மட்டுமா?
விண்ணப்பப் படிவத்தில் ஏன் இந்தப் பாகுபாடு-
ஆ.திருவேங்கடம் கேள்வி
இவ்வாண்டு 2013 மெட்ரிகுலேசன் மாணவர் நுழைவு விவகாரம் இன்னும்
தீர்கப்படவில்லை.நூற்றுக்கணக்கான 10ஏ, 9ஏ, 8ஏ, 7ஏ, 6ஏ எடுத்த மாணவர்கள்
அக்கல்வி ஆரம்பிக்கப்பட்டு 7 வாரங்கள் கடந்து விட்ட நிலையில், இடம்
இன்னும் கிடைக்கும் என்னும் நம்பிக்கையில் வெளியில் காத்துக்
கொண்டிருக்கின்றனர் என மலேசிய கல்வி சமூக விழிப்புணர்வுக் கழகத்தின் தலைவர்
ஆ.திருவேங்கடம் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் 2014 மெட்ரிக்குலேசன்
விண்ணப்பம்
1 ஜூலை 2013 முதல் துவங்கிவிட்டது.பூமிபுத்ரா அல்லாத மாணவர்கள்
விண்ணப்பம் செய்வதைத் தடுக்கும் நோக்கத்தில் இணைய பதிவுப் படிவத்தில்
வேண்டுமென்றே 3 இடங்களில் புமிபுத்ராக்கள் மட்டுமே இக்கல்விக்கு
விண்ணப்பிக்க முடியும் என மெட்ரிகுலேசன் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பகுதி 2.0இல் Program Matrikulasi Kementerian Pendidikan Malaysia
merupakan program persediaan bagi pelajar Bumipetera lulusan SPM என
உள்ளது.அடுத்து Kelayakan untuk memohon என்னும் பகுதியில் விண்ணப்பிக்கும்
மாணவர்களின் தகுதி குறிப்பிடப்பட்டுள்ளது.Pemohon adalah pelajar
Bumiputera warganegara Malaysia yang berumur tidak melebihi 20 tahun
pada 1 Januari 2014 dan menghantar borang permohonan sebelum atau pada
10 Oktober 2013 என்னும் வார்த்தைகளில் மீண்டும் புமிபுத்ராக்கள் மட்டுமே
விண்ணப்பிக்க முடியும் என நேரடியாக குறிப்பிட்டு வலியுறுத்தப்படுகின்றது.
எண் 32 இறுதிப்பகுதியில் Sila pilih status bumiputera atau bukan
bumiputera என்னும் பகுதியில் விண்ணப்பிக்கும் மாணவர் தானொரு பூமிபுத்ராவா
இல்லையா என உறுதிபடுத்த வேண்டும்.
பிரதமர் அறிவித்த 1500 மெட்ரிகுலேசன்
இடங்களை நம் சமூகம் வலியுறுத்திக் கேட்பதனால், மெட்ரிகுலேசன் அதிகாரிகள்
இவ்வாறு ஆரம்பத்திலிருந்தே விண்ணப்பத் தடைகளைக் முன் வைத்து பூமிபுத்ரா
அல்லாத மாணவர்கள் விண்ணப்பம் செய்வதைத் தடுக்க அல்லது குறைக்க முயற்சி
செய்கின்றனர் என ஆ.திருவேங்கடம் குறிப்பிட்டார்.கல்வித் துணை அமைச்சர்
கமலநாதன் கடந்த வெள்ளிக் கிழமை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில்
இவ்வாண்டு எஸ்பிஎம் மாணவர்களை மெட்ரிகுலேசனுக்கு விண்ணபிக்க ஆலோசனை
கூறினார்.அவர் அக்கூட்டத்தை நடத்தும் முன்பு மெட்ரிகுலேசன் அகப்பக்கம்
சென்று இது போன்ற விவரங்களை அலசி ஆராயவில்லை என்பது தெளிவாகத்
தெரிகின்றது.இவர் போன்ற விவரம் தெரியாதவர்கள் கல்வித் துணை அமைச்சர்
ஆக்கப்பட்டுள்ளது உண்மையில் நம் சமூகத்திற்கு பெருங்குறையே என
திருவேங்கடம் கருத்து தெரிவித்தார் .
இவ்வறிக்கையைப் பார்த்ததும்
அதுவெல்லாம் ஒன்றுமில்லை;பயப்படாதிர்கள்; விண்ணப்பம் செய்யுங்கள் என
அறிக்கைவிட கமலநாதன் நிச்சயம் தயங்க மாட்டார்.மெட்ரிகுலேசன் அதிகாரிகள்
செய்யும் படுமோசமான இனப்பாகுபாட்டு அமலாக்கங்களை இவர் கண்டிக்க
மாட்டார்.இதற்குக் காரணம் இவரிடம் ஓர் அதிகாரமும் இல்லை என்பதே உண்மை.
இன்று வரை இவ்வாண்டு 7 வாரங்களாக மெட்ரிகுலேசன் கல்விக்குக் காத்திருக்கும்
300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரு பதிலும் தர முடியாமல் சம்பந்தம்
இல்லாத கதைகளைக் கூறிக் கொண்டிருக்கும் ஒரு பொறுப்பற்ற துணை அமைச்சரை
என்னவென்று கண்டிப்பது என்று தெரியவில்லை என ஆ.திருவேங்கடம் தமதறிக்கையில்
குறிப்பிட்டுள்ளார்..
No comments:
Post a Comment