A.Thiruvenggadam |
மாநில அரசிற்கு ஒரு கிர் தோயோ மைய அரசிற்கு ஒரு முஹிதீன் யாசின்
முக நூல் நண்பர்களின் பலவித கருத்துக்களை நானும் அறிவேன்.
தற்பொழுது மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய சில கல்வி நன்மைகள், உரிமைகளுக்காக தற்பொழுது ஆள்பவர்களோடு பேசும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
மற்றபடி தற்பொழுது கல்வி உரிமைகள் மிக மோசமானதற்குக் காரணம் முஹிதீன் யாசின் அவர்களே என்பது மீண்டும் மீண்டும் உறுதிப் படுத்தப் படுகின்றது.சிலா ங் கூர் BN அரசு பலத்தத் தோல்வி அடைய கிர் தோயோ உதவியது போல்,BNனின் மைய அரசு படு தோல்வி அடைய முஹிதீன் யாசினே முக்கியக் காரணியாக அமைவார் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை.அதர்மம் அதன் உச்சத்திற்குச் செல்லும் பொழுது அறம் அதன் பாதையை எடுக்கும்.
பசி எடுத்த ஒருவரிடம் உணவை வழங்காமல் அறம் கடவுள் என்றா பேச முடியும்? உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு உதுவும் வழிகள் தேடும் பொழுது நாம் ஆயுதங்களை சில நாள்கள் கீழே போட வேண்டியிருக்கும்.
No comments:
Post a Comment