Total Pageviews

Friday, 8 August 2014

தமிழ்மொழி உலக முதன் மொழிகளுள்ஒனறு

தமிழ்மொழி பிற மொழிகளின் துணை இன்றியே தனித்து இயங்கக் கூடியது. அது உலக முதன் மொழிகளுள்ஒனறு. புதுமைமிக்க அறிவியல் துறையிலும் அது தன் ஆற்றலை விளங்கச் செய்ய இயலும். ஏனெனில் அது நொய்வத் தன்மையுடையது. வேர்ச் சொற்களைக் கொண்டது. பலுக்குதலுக்கு இனியது ஷ,ஹ,ஹூ,ஹு என்றெல்லாம் மொழிவோரை களைப்புறச் செய்து உட்காற்றினை வெளியாக்கி வாழ்நாளையும் குறைக்காது 

பாரிதிமாற்கலைஞர் பெரும்புலவர்.காலையில் சமஸ்கிருத மந்திரங்களை ஓதி வழிபாடு செய்வார். விரைவில் களைத்துப்போவார். நுரையீரலி நோவு கண்டார்.பின்னர், ஒருவரின் அறிவுரையால் பைந்தமிழ்ப்பாக்களால் வழிபாடு நடாத்தினார்.நுரையீரல் நோய் மறைந்தது. களைப்பு நீங்கியது. உள்ளத்தில் மகிழ்வும்,நிறைவும் குடி கொண்டன.தமித்தாய் தன் சேயை அணைத்துக் கொண்டாள்.சேயும் அன்னுயின் மடியில் அமைதிக்கண்டது.வீரமும் காதலும் வாழ்வில் இன்பமாய்த் திகழ,பீடுற பிற நாடுகளை வென்ற தமிழர் பின்னாட்க்களில் இன மொழி உணர்விழந்தார் 

கலையிழந்தார்;அடிமையானார் .இன்று மிகச் சிறந்த தம் மொழியின் பெருமையும் அறியாது,பிற மொழியின் பால் காமுற்று தமிழைப் பேசவும் கூசி வாழ்கின்றார்.பெருமை குன்றி அடிமைத்தனம் ஊறியதால் தமிழும் கூட அடிமைமொழி போல் தோன்றியது போலும் பிற மொழிக்காரர் தம் மொழிக்கு தரும் சிறப்பை மதிப்பை தமிழர் தமிழுக்குத் தருவதில்லை.இது அடிமை மனப்பாங்கின் நிலை.தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு.இந்தத் தாழ்வு மனப்பான்மையால் மட்டும் தமிழர் தமிழ்ப் பெயரைத் தம் செல்வங்களுக்கு இடுவதில்லை.தமிழறிவு அற்றமையும் ஒரு 

 காரணியமாகும்.பிறக்கவிருக்கும் நம் செல்வங்களுக்கு செந்தமிழ்ப் பெயரிடுவோம்.தாழ்வுற்ற இனம் தலைநிமிரமொழியின் ஆளுமை தேவை. மொழியின்ஆட்சி வலிமை பெற வேண்டும்.இதனைப் பிறஇன மக்கள் உணர்துள்ளனர் நாமும் உணர வேண்டும்.இன உணர்வு,நாட்டுப்பற்றுணர்வு இந்த நூற்றாணடில் தலை தூக்கிவிட்டது.அது ஊழி தீயென எரியபோகிறது. தமிழர் தலை நிமிரும் காலம் தொலைவில் இல்லை.அவ்வூழித் தீயின் சுடர் இளந்தமிழரே உங்கள் கையில் இன்றுள்ளது அதனை அழியாது காப்பது உங்கள் கடமை. தமிழராய்ப் பிறந்துவிட்ட கடனைக் கழிக்க கடமையைச் சிறிதாவதுஆற்றி மன நிறைவு கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டி இளஞைர்களை அழைக்கிறேன் தலைமை தாங்க. வணக்கம்

No comments:

Post a Comment